Thursday, December 25, 2008

Anamikanjali-(4)26/12/2008-Batticaloa
















My Golden Angel


My angel four years have sped by since you have left us.But ,all these days that have gone by were ineed filled with your memories.Not a single day has gone without your memories filling us to the brim,to say the least.In these days many things have taken place.But,days and nights ,each and every hour without you remain barren.

ஆடல் காணீரோ


அழகு மகளின்
ஆடல் காணீரோ
காணக் கண்கோடி
வேண்டுமே.

அனமிகா-1990


பிள்ளைக் கனிஅமுதே


பேசும் பொற் சித்திரமே

Tuesday, December 16, 2008

அனாமிகா அஞ்சலி நான்காம் ஆண்டு-சுனாமி நினைவில் -2008

எல்லாம் எப்படி
என
நீ
கேட்ட கேள்விகளை
நான்
இப்பொழுது
அடிக்கடி
கேட்டுக்கொள்கிறேன்.
மகள் எப்பொழுதும்
உன் நினைவிலேயே
கரைந்து போகிறேன்.

Monday, July 14, 2008

அனாமிகா நூலகம்

அனாமிகா பெயரில் அமைநுள்ள நூலகம்.இது வரும் மார்கழி 26 /2008 அன்று திறந்து வைக்கப்பட உள்ளது இந்த நூலக்கத்திற்கு நூல்கள் அனுப்ப விறும்புவோர் பின் வரும் முகவரிக்கு அன்ப்பி வையுங்கள். No 48 baili 1st cross street,batticoloa,srilanka.தொடர்பு இ மெயில் balasugumar@yahoo.com



Sunday, June 29, 2008

எழுத்தாளர் சுஜாதாவும் அனாமிகாவும்


சுஜாதா
தமிழ் இலக்கிய உலகில் சாதனைகள் படைத்த 'கதா'நாயகன்.அறிவியலை
தமிழ் எழ்த்துலகிற்கு இழுத்து வந்தவன்.
சுனாமியில் கரைந்து போன எங்கள் மகள் அனாமிகா பற்றி ஜூனியர் விகடன் மூலம் அறிந்து கொண்ட சுஜாதா அவர்கள் ,அவள் நினைவில் 'அனாமிகா'
என்ற கதையை ஆனந்தவிகடனில்
'கற்றதும் பெற்றதும்' தொடரில் பதிவு
செய்திருந்தார்.தொடர்ந்து அனாமிகாவின்'தேவதைக் கிறுக்கல்கள்' 'சின்னதேவதை' ஆகிய வெளியீடுகளை ஆனந்தவிகடனில் அறிமுகப்படுதியிருந்தார்.தமிழகம் சென்றிருந்த போது அவரை சந்தித்த நினவுகள் என்றும் மறக்க முடியாத பதிவுகளாய் உள்ளன.
எங்கள் மகள் அனாமிகாவின் நினைவுகளோடு சுஜாதாவும் கலந்திருக்கிறார்.

ஆவாரம் பூப்போல்

தேவதையாகி
திரிந்த நாட்களெல்லாம்
ஆவாரம் பூப்போல்
அத்தனையும் சொரிந்ததுவே
பூவே
உன் பூவிதளும்
பொன்போன்ற
பாதங்களும்
சாவாது என்றும்
தரணிய்யில் நிற்குமடி.

சேனையூர் இரத்தினா

Wednesday, June 18, 2008

இறுதிச் சொல்


பூத்திகளும் பொன்மேனிப் புனிதமலரே
பூவெறியும் உனது
மென் சொற்களின் தேனுண்டவர் நாம்
நீ உமிழ்ந்த இறுதிச்சொல்
எந்த அலையில் மிதக்கிறது சொல்
வாழ்வின் உட்பொருள் தேடி
முகக்கும் உனதறிவின்
வாயுண்டு உமிழ்ந்த சொல்லின்
பொருள் என்ன
தெற்கு மூலையில்
யமன் திசையில்
காத்திருக்கும் எங்களுக்கு
உன்
சேதியினைச் சொல்லிவிடு.
சு.வில்வரெத்தினம்

கரை எழுத்து


Anamika Foundation



Anamika Anjali 2007 London




Angel you are
Grief of time
Fruit of time
Poetry of time
Space of time
Angel
Forever you are
A dream
A dream
That was real
The real that
Became the dream
A dream of time
So
Til then
You
Within and out
Of our eyes

Monday, June 16, 2008

அனாமிகா அஞ்சலி (3) மட்டக்களப்பு 2007



அனாமிகா அஞ்சலி 1 2005


ஏஞ்சல்
என்றென்றும்
நீ
கனவு
கலைந்தும் கலையாத
காலக் கனவு.

இரண்டாம் ஆண்டு நினைவு 2006 லண்டன்

ஏஞ்சல்
நீ ஓடிய முற்றம்
தேடிய மரங்கள் செடிகள் கொடிகள்
மிருகங்கள் பறவைகள்
உறவுகள் யாவுமே
இப்போதும் இப்போதும்
உன்னை நேசித்தபடி...

கலாநிதி செ.யோகராசா

Sunday, June 15, 2008

நினைவலைகள்


நீ ஆடிய கால்கள்
அப்பாவின் கண்களிலே
நீ பாடிய குரலிசைகள்
அம்மாவின் செவிகளிலே
நீ பழகிய உறவுகள்
அனைவரது நினைவுகளிலே
நீ சிரித்த முக வெட்டுக்கள்
வீட்டின் அறகளிலே
மீண்டும் ஒருமுறை
உன் நடனம் காண ஆசை
உன்பாடல் கேட்க ஆசை
உன் கவிதை காண ஆசை
பேராசிரியர் கே.ஏ.குணசேகரன்

அனாமிகா கவிதைகள்

வாழ்க்கை

வாழ்க்கை
என்ன இது?
இதற்கு அர்த்தமென்ன?
ப்ற்க்குமுன் எங்கிருந்தோம்?
இறந்தபின்பு எங்கே போவோம்?
எப்பொழுது இறப்போம்?