
சுஜாதா
தமிழ் இலக்கிய உலகில் சாதனைகள் படைத்த 'கதா'நாயகன்.அறிவியலை
தமிழ் எழ்த்துலகிற்கு இழுத்து வந்தவன்.
சுனாமியில் கரைந்து போன எங்கள் மகள் அனாமிகா பற்றி ஜூனியர் விகடன் மூலம் அறிந்து கொண்ட சுஜாதா அவர்கள் ,அவள் நினைவில் 'அனாமிகா'
என்ற கதையை ஆனந்தவிகடனில்
'கற்றதும் பெற்றதும்' தொடரில் பதிவு
செய்திருந்தார்.தொடர்ந்து அனாமிகாவின்'தேவதைக் கிறுக்கல்கள்' 'சின்னதேவதை' ஆகிய வெளியீடுகளை ஆனந்தவிகடனில் அறிமுகப்படுதியிருந்தார்.தமிழகம் சென்றிருந்த போது அவரை சந்தித்த நினவுகள் என்றும் மறக்க முடியாத பதிவுகளாய் உள்ளன.
எங்கள் மகள் அனாமிகாவின் நினைவுகளோடு சுஜாதாவும் கலந்திருக்கிறார்.